மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி..! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று.? தனிமைப்படுத்தப்பட்டநிலையில் நாளை கொரோனா பரிசோதனை..!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் நாளை அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவால் இதுவரை இந்தியாவில் 258,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,207 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவும் விதமும் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருப்பதாகவும், இவை கொரோனா அறிகுறி என்பதால் அரவிந்த் கெஜ்ரிவால் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், நாளை அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்வதாக இருந்த சந்திப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.