#Breaking: ஆப்கானிஸ்தானை தொடர்ந்து, டெல்லியில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்.!



Delhi Earthquake Today 

 

கடந்த சில வாரமாகவே ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு ஏற்பட்டு வந்த அதிபயங்கர நிலநடுக்கங்கள் காரணமாக உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

துருக்கி ஆய்வாளரின் கணிப்புப்படி இந்தியா-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானை மையமாக வைத்து வரும் ஆண்டுகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும். சிரியா-துருக்கி நிலநடுக்கம் போல அழிவை ஏற்படுத்தும் என எச்சரித்து இருந்தார். 

இதற்கிடையில் தான் தற்போது ஆப்கானிஸ்தான் பகுதியில் அதிபயங்கர நிலநடுக்கமானது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் இன்று காலை கூட ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளை கடந்து நிலநடுக்கம் உணரப்பட்டது. தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை நிலநடுக்கத்தை உறுதி செய்துள்ளது. 

ரிக்டர் அளவுகோலில் 3.1 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம், ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபத் பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.