டெல்லி தேர்தல் இறுதி முடிவு! காங்கிரஸ் டோட்டல் வாஸ் அவுட்! முழு விவரங்கள் உள்ளே!
டெல்லியில் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. நடந்து முடிந்த தேர்தலில் 62.59 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் 79 பெண்கள் உள்பட 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்குத் துவங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று வந்தது. நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால், மூன்றாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
பாஜக இரண்டாம் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா 8 தொகுதிகளில் வெற்றிபெற்றது. தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும், ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்தன. அதேபோல் தேர்தல் முடிவும் அமைந்தது.
காங்கிரசுக்கு, இந்த தேர்தலில் ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் 3-வது முறையாக டெல்லி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.