96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சாக்லேட்டுடன் கவரையும் சாப்பிட்ட சிறுமி: மூச்சுக்குழாயில் சிக்கி துடித்த பிஞ்சு.. பெற்றோர்களே கவனம்.!
டெல்லியை சார்ந்த பெண்மணி அன்ஷுள் சோழங்கி. இவரின் 8 வயது மகள் பாரி. கடந்த சில நாட்களாகவே சிறுமி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளார். முதலில் சீசன் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டு இருக்கலாம் என்று பெற்றோர் எண்ணியுள்ளனர். அதற்கான சிகிச்சை பெற்றும் பலன் இல்லை.
உடல்நிலை தொடர்ந்து மோசமானதால், சிறுமியின் நிலையை கண்டு பதறிப்போன பெற்றோர்கள், அங்குள்ள ஆகாஷ் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு நடந்த பரிசோதனையில், சிறுமியின் மேல் மூச்சுக்குழாயில் சாக்லேட் கவர் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் Bronchoscopy முறையில் சாக்லேட் கவரை இரண்டு திட்டங்களை செயல்படுத்தி வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.
தொடர்ந்து சிறுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரின் உடல்நலம் முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தைக்கு சாக்லேட் கொடுத்தபோது, அவர் தவறுதலாக கவரையும் சேர்த்து சாப்பிட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.