டெல்லி பல்கலைக்கழக மாணவர் தூக்கிட்டு தற்கொலை; மன அழுத்தத்தால் தொடரும் சோகம்.!



Delhi IIT Student Suicide Today 

 

டெல்லியில் உள்ள ஷ்த்ரா குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பாவின் ஜெயின் (வயது 23). இவர் அங்குள்ள ஐஐடி-யில் பி டெக் நான்காம் வருடம் படித்து வருகிறார். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே மனரீதியான பிரச்சனை எதிர்கொண்டு, எப்போதும் ஒருவித வருத்தத்துடன் காணப்பட்டு வந்த ஜெயின், அதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டு இருக்கிறார். 

இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் அவரின் பெற்றோர் நடைபயணம் மேற்கொள்ள வெளியே சென்றிருந்தனர். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மகன் சடலமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தபோது, மருத்துவர்கள் ஜெயின் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர். 

ஐஐடி பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வரும் நிலையில், இவை குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.