ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கல்வீச்சு., கலவரம்... மீண்டும் பதற்றம்.. காவல்துறை குவிப்பு.!



Delhi Jahangirpuri Hanuman Jayanthi Clash Stone Violence

ஊர்வலத்தின் போது கல்வீசி தாக்குதல் நடத்தி கலவரம் ஏற்பட்டதால் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்ப்பூர் பகுதியில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இந்து பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். இன்று மாலை ஊர்வலம் தொடங்கி, ஜஹாங்கிர்ப்பூர் பகுதியில் செல்கையில் திடீரென சமூக விரோதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதனால் நிகழ்விடத்தில் பதற்ற சூழல் ஏற்பட்டு இருதரப்பு மோதல் உருவானது. மேலும், கல்வீச்சு தாக்குதல் நடந்த காரணத்தால், உடனடியாக கூடுதல் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு, தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 

பதற்ற சூழ்நிலையில் எதிரிகள் நடத்திய தாக்குதலில் 2 காவல் அதிகாரிகளும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 200 க்கும் மேற்பட்ட ஆர்.ஏ.எப் அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் அனைவரும் அமைதிக்காக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.