முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டமாட்டாது - வெளியானது அதிரடி அறிவிப்பு.!



Delhi Natural Disaster Management Department Announced

கொரோனா பரவலை குறைக்க அரசு முகக்கவசம் அணிய கூறிய நிலையில், கொரோனா பரவலின் வீழ்ச்சியால் முகக்கவசம் கட்டாயம் கிடையாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்தந்த மாநில அரசின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக முகவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை கட்டாயமாக்கப்பட்டது. 

அவ்வாறு அரசின் அறிவிப்புகளான முகக்கவசம் அணியாமல் இருத்தல், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருத்தல் போன்ற விஷயங்களில் அலட்சியமாக இருந்தால் அபராதமும் வசூலிக்கப்பட்டு வந்ததது. இந்நிலையில், மேற்படி அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி

டெல்லி மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தலுக்கு வசூலிக்கப்படும் அபராத நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. 

கொரோனா காலத்தில் மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த பணியாளர்களின் காலக்கெடு, நடப்பு ஆண்டு இறுதி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா குறைந்து வருவதால், மக்களுக்கு பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.