#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தோனி ஓய்வை அறிவித்த பிறகு அன்று இரவு என்ன நடந்தது..? சுரேஷ் ரெய்னா கூறிய ஷாக் தகவல்.!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தபிறகு தானும், தோனியும் கட்டிபிடித்து அழுததாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனி தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இதனை அடுத்து மற்றொரு நடச்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார்.
ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்வாய்ந்த இரண்டு வீரர்கள் ஒரே நாளில் தங்கள் ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஓய்வை அறிவித்தபிறகு அன்று இரவு என்ன நடந்தது என்பது குறித்து சுரேஷ் ரெய்னா க்ரிக் ட்ராக்கர் இணையதளத்தின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தோனி ஓய்வை அறிவிக்க இருப்பதை அவர் அறிவிப்பதற்கு முன்பாகவே அவரிடமிருந்து தான் தெரிந்துகொண்டதாகவும், ஓய்வை அறிவித்த பிறகு நானும் தோனியும் நீண்ட நேரம் கட்டியணைத்து அழுதுகொண்டே இருந்ததாகவும் ரெய்னா கூறியுள்ளார்.
மேலும், பியுஷ், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், கர்ன் சாட் அனைவரும் அன்று இரவு முழுவதும் தங்களது கிரிக்கெட் வாழ்வைக் குறித்து பேசிக்கொண்டே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.