பிரதமர் மோடியின் வைர ஆடையை ஏலம் எடுத்த வைர வியாபாரிக்கு நேர்ந்த கொடுமை!



Diamond merchant duped by brothers

2015 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி அணிந்த வைரம் பதித்த ஆடையை 4.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் பிரபல வைர வியாபாரி லால்ஜிபாய் படேல். சூரத்தை சேர்ந்த இவர் தர்மாநந்தன் டைமண்ட்ஸ் என்ற வைர நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

பிரதமர் மோடியால் 2015ல் பிரபலமான லால்ஜிபாய் மீண்டும் இரண்டு சகோதரர்களால் பிரபலமாகியுள்ளார். ஹிமாத் மற்றும் விஜய் கோசியா என்ற சகோதரர்கள் கடந்த ஆண்டு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை கடனாக வாங்கி லால்ஜிபாயை ஏமாற்றிவிட்டனர். 

pm modi

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி தர்மாநந்தன் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாளர் கமலேஷ், காட்டார்காம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில், கோசியா பிரதர்ஸ் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 1500 கேரட் வைரத்தை கடனாக பெற்று சென்றதாகவும், அந்த கடனை 120 நாட்களுக்குள் திருப்பி தந்துவிடுவதாகவும் கூறியுள்ளனர்.  ஆனால் குறித்த நேரத்தில் அவர்கள் பணத்தை திருப்பி தரவில்லை. 

pm modi

அதன் பிறகு அவர்களின் மொபைல் போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. அவர்கள் கடையை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து போலிசில் புகார் அளித்த போது, அவர்கள் ஏற்கனவே இதேபோன்று வேறு ஒரு கடையில் ஏமாற்றியதாக தெரியவந்துள்ளது. hop