மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தித்திக் நிமிடங்கள்.. தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி.. நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே காவலர்.. வைரலாகும் பரபரப்பான காட்சிகள்.!
குஜராத் மாநிலம் வாபி ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்வதற்காக தண்டவாளத்தில் இறங்கியுள்ளார். அப்போது அவர் கால் இடறி தண்டவாளத்தின் குறுக்கே விழுந்துள்ளார்.
இந்நிலையில் அந்த தண்டவாளத்தில் சூரத் - பாந்த்ரா டெர்மினஸ் இன்டர்சிட்டி ரயிலானது விரைந்து வந்து கொண்டிருந்தது. இதனை கவனித்த ரயில்வே காவலரான வீராபாய் மேரு உடனடியாக நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் குதித்து கீழே தவறி விழுந்த நபரை காப்பாற்றி நொடி பொழுதில் உயிர் தப்பினார்.
மேலும் தனது உயிரை பொருட்படுத்தாமல் பயணி ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே காவலரின் இந்தப் பாராட்டுதல்குறிய சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் தற்போது வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் பயணியின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.