மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் அடித்து கொலை.. போலீசார் அதிரடி நடவடிக்கை!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் வெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில் உள்ள விகாஷ் என்ற இளைஞர் கடந்த 2022 ஆம் ஆண்டு கரிஷ்மா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்த அடுத்த சில நாட்களிலேயே வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளனர்.
ஆனால், அந்தப் பெண் ஏற்கனவே 11 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் கார் ஆகியவற்றை வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தற்போது கரிஷ்மாவுக்கு பெண் குழந்தை பிறந்ததை காரணமாக கூறி, மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இதனையடுத்து அடிக்கடி வரதட்சணை கேட்டு கரிஷ்மாவை, கணவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்திய நிலையில், அந்த பெண்ணை அடித்து கொலை செய்துள்ளனர். இதனையடுத்து கரிஷ்மாவின் வீட்டார் போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கரிஷ்மாவின் கணவர் விகாஸ் மற்றும் மாமனாரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அந்த பெண்ணின் மாமியார் மற்றும் கணவரின் சகோதர சகோதரிகளை தீவிரமாக தேடி வருகின்றன.