மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இறுதி ஊர்வலத்தில் நடந்தேறிய பகீர் சோகம்.... மின்சாரம் தாக்கி பலியான உறவினர்கள்.!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உறவினரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வந்த போது மின்கம்பி அறுந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் குப்பம் என்ற பகுதியில் 68 வயதான ராணியம்மா என்பவர் நேற்று மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இவரது இறுதிச் சடங்கில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டனர்.
ராணியம்மாவின் உடல் பல்லக்கில் வைத்து ஊர்வலமாக சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடலானது சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்ற போது மின்கம்பியில் பல்லக்கு உரசியதால் ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் முனப்பா (45),திருப்பதி (52), ரவீந்திரன் (37) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர்களின் உடலை காவல்துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.