மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெங்களூரை பதற வைத்த சம்பவம்... குடும்பத் தகராறில் மனைவியின் விரலை மென்று துப்பிய கணவர்.... ஷாக்கிங் ரிப்போர்ட்.!
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் கணவன் மற்றும் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கைவிரலை கணவன் கடித்து மென்று தின்ற சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பெங்களூருவைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் புஷ்பா தம்பதியினருக்கு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் தலையிட்டு சமரசம் செய்து வைத்துள்ளனர்.
விஜயகுமார் தனது மனைவியை உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் கொடுமைப்படுத்தி வந்ததால் அவரிடமிருந்து பிரிந்து தனி வீட்டில் வசித்து வந்திருக்கிறார் புஷ்பா. இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி புஷ்பா வீட்டிற்கு சென்ற விஜயகுமார் அவருடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.
அக்கம் பக்கத்தினர் வந்து அவரை அங்கிருந்து செல்லும்படி கூறியும் போகாமல் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த விஜயகுமார் மனைவியின் இடது கை ஆள்காட்டி விரலை வாயால் கடித்து மென்றுள்ளார். இதனால் அலறி துடித்திருக்கிறார் புஷ்பா. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் புஷ்பாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக புஷ்பா தரப்பு கொடுத்த புகாரின் பேரில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து இருக்கிறது காவல்துறை.