மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபரப்பு... அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 5,9 ஆக பதிவு.!
இந்தியாவிற்கு சொந்தமான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேருக்கு அருகே இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறத. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் இருந்து தென்கிழக்கு 126 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5,9 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஆனது பூமியின் மேற்பரப்பிலிருந்து 69 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் கடும் பயத்தில் உள்ளனர்.
இந்த வருட துவக்கத்தில் இருந்தே உலகின் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது .