மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐய்யோ போச்சே... 8 மாத பிஞ்சு குழந்தைக்கு மாரடைப்பா.? உயிரிழந்த சோகம்.!
கேரள மாநிலம் கோட்டயத்தில் எட்டு மாத குழந்தை மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தின் மீது புகாரளித்திருக்கின்றனர் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்.
கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டத்தை அடுத்துள்ள மணற்காடு பத்தழகுழியைச் சேர்ந்தவர் எபி இவருக்கு திருமணமாகி ஜோன்சி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு எட்டு மாதங்களுக்கு முன்பு ஜோன்ஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்படவே கோட்டயம் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த மே 29ஆம் தேதி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு இன்பிளிக்சிமாப் என்ற மருந்து ஊசியின் மூலம் செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த மருந்தை செலுத்திய சிறிது நேரத்தில் குழந்தை மூச்சு விட முடியாமல் திணறி துடித்துள்ளது. இதனைக் கண்ட குழந்தையின் தாய் மருத்துவர்களின் உதவியை நாடி இருக்கிறார்.
அப்போது பணியிலிருந்த பயிற்சி மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தோம் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. அந்தக் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தைகள் நல மருத்துவமனையின் மீது புகார் அளித்தனர். இன்பிளிக்சிமாப் என்ற மருந்தை செலுத்தினால் மாரடைப்பு ஏற்படும் என்று தெரிந்தும் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் செலுத்தியது. ஏன்.? என கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் குழந்தைக்கு ஏற்கனவே கடுமையான இதய நோய் இருந்தது எனவும் மேலும் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட மருத்துவம் சரியான முறையிலேயே வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.