#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி: கல்லூரிகளுக்கு யு.ஜி.சி அதிரடி உத்தரவு..!
பாலியல் புகார்களை விசாரிக்க கல்லூரிகளில் பிரத்யேகமாக உயர்மட்ட கமிட்டியை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று யு.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில், இந்தியா முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு விரைவில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இந்த நிலையில், பாலியல் புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள பிரத்யேகமாக உயர்மட்ட கமிட்டியை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானிய கமிஷன் (University Grants Commission) உத்தரவிட்டுள்ளது.
பாலியல் புகார்களை விசாரணை செய்யும் உயர்மட்ட கமிட்டியை உருவாக்குவதில் தாமதம் கூடாது. தனி கமிட்டியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானிய கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் பேராசிரியைகள், மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்கள் உயர்மட்ட கமிட்டி அமைக்கவில்லை அல்லது கனிட்டியை செயல்படுத்த வில்லை என்ற புகார் வந்ததால் மீண்டும் இது குறித்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.