மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கலாச்சார நிகழ்ச்சியில் பயங்கரம்... பிரபல பாடகியின் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு.!
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற கலாச்சார விழாவின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரபல போஜ்புரி பாடகியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநில தலைநகரான பாட்னாவில் கலாச்சார விழா நடைபெற்றது. இதில் ஆடல் பாடல் என பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பிரபல போஜ்புரி பாடகியான நிஷா உபாத்யாய் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்து கொண்டனர். கலைஞர்கள் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளின் போது அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக மேடையை நோக்கி பணத்தை வீசினர். கோலாகலமாக நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் மேடையை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார் இதில் பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபத்யாய் காயமடைந்தார் அவரது தொடையில் குண்டு பாய்ந்து உள்ளது. தற்போது அவர் பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.