மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல பாடகியின் தந்தை மர்ம மரணம் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. விசாரணையில் பரபரப்பு தகவல்கள்.!
தெலுங்கு பாடகி ஹரிணி ராவ்வின் தந்தை ஏ.கே ராவ் பெங்களூரில் உள்ள இரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.பி சுஜனா சவுதாரியின் சுஜனா குழும அறக்கட்டளை தலைவர் ஏ.கே ராவ். இவர் பிரபல தெலுங்கு பாடகி ஹரிணி ராவின் தந்தை ஆவார். இவர் கடந்த நவ.22 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் எலஹங்கா - ராஜணுகுண்டே இரயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாள பகுதியில் பிணமாக இருந்துள்ளார்.
ஹைதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த ஏ.கே ராவ், வணிகரீதியான பயணத்துக்கு நவ. 13 ஆம் தேதி பெங்களூர் வந்துள்ளார். இரயில் தண்டவாளத்தில் மர்ம நபரின் சடலம் இருப்பதாக காவல் துறையினருக்கு இரயில் ஓட்டுநர் அளித்த தகவலின்பேரில், இரயில்வே காவல் துறையினர் உடலை கைப்பற்றி அடையாளம் காணுகையில், அது பாடகி ஹரிணி ராவ் தந்தை என்பது உறுதியானது.
கடந்த 13 ஆம் தேதி பெங்களூர் வந்த ஏ.கே ராவ் விடுதிக்கு சென்ற நிலையில், கடந்த 19 ஆம் தேதிக்கு பின்னர் குடும்பத்தினரிடம் பேசவில்லை. ஆனால், 21 ஆம் தேதி விடுதியில் இருந்து செல்ல வாகனம் முன்பதிவு செய்திருந்த நிலையில், நவ. 22 ஆம் தேதி இரயில் தண்டவாளத்தில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
காவல் துறையினர் ஏ.கே ராவின் உடலை கைப்பற்றுகையில் நெற்றி, மணிக்கட்டு பகுதியில் காயம், கழுத்து பகுதியில் வெட்டுக்காயமும் இருந்துள்ளது. மேலும், அவரின் உடல் அருகே சில மீட்டர் தொலைவில் கத்தி, கத்தரிக்கோல் போன்றவையும் மீட்கப்பட்டது. இதுகுறித்து, பெங்களூர் இரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஹரிணி தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், முதற்கட்டமாக நிதி நிறுவன முதலீடு பிரச்சனையில் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு நடந்து வருகிறது.