மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொதுத் தேர்வுக்கு படிக்காத மகளை அடித்து கொன்ற கொடூர தந்தை!
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வுக்கு படிக்காத மகளை தந்தை அடித்துக் கொண்டு சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிரோஹி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வந்த நிலையில், மாணவி சரியாக படிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த தந்தை தனது மகளை கண்டித்து கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த மாணவி ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாணவியின் உறவினர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மகளை அடித்துக் கொன்ற தந்தையை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.