#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் தொடர்புள்ளதாக தந்தை, மகள் கைது!
புல்வாமா தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தந்தை, மகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். புல்வாமா அருகே ஹக்ரிபோரா கிராமத்தை சேர்ந்த தாரிக் அகமது ஷா, இன்ஷா ஜன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில் கடந்த ஆண்டு 2019, பிப்ரவரி 14-ம் தேதி 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ - முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இந்தநிலையில், இந்த தாக்குதலுக்கு உதவியதாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தந்தை, மகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். புல்வாமா தாக்குதலில் தொடர்பிருப்பதாக தந்தை - மகள் லேத்போரா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
தந்தை பீர் தாரிக் மற்றும் அவரது மகள் இன்ஷா ஆகியோர் இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கு உதவியதாக கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.