குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
டீ கொடுக்காத மருமகளை சுட்டுத்தள்ளிய மாமனார்.. பதறவைக்கும் துயர சம்பவம்..!
காலை தேனீருடன் உணவு வழங்காததால், தனது மருமகளை துப்பாக்கியால் மாமனார் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே பகுதியில் வசித்து வருபவர் காசிநாத் பாண்டுரங் பாட்டீல் (வயது 76). இவருக்கு 42 வயதான மருமகள் ஒருவர் உள்ளார். இந்த நிலையில், நேற்று காலை தேனீர் வழங்கியபோது, அதனுடன் காலை உணவை சேர்த்து வழங்காத காரணத்தால் காசிநாத் மருமகளிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மருமகளுக்கும், காசிநாத்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆவேசமடைந்த காசிநாத் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து, மருமகளை சுட்டுள்ளார். மருமகளின் வயிற்றில் துப்பாக்கியால் சுட்டதால், அவர் ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்து விழுந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மற்றொரு மருமகளுக்கு தெரியவர, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.அத்துடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், காசிநாத் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், தாக்குதலுக்கு வேறு எதுவும் காரணம் இருக்கிறதா? என்ற ஒரு கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.