#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தொடரும் ஆணவக் கொலை; காதல் விவகாரத்தில் மகளை கொன்று புதைத்த தந்தை போலீசில் சரண்: அதிர்ச்சி பின்னணி..!
காதல் விவகாரத்தில் பெற்ற மகளையே தந்தை கொன்று புதைத்த சம்பவம் மைசூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா, மைசூர் மாவட்டம் பெரியபட்டினம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மகள் ஷாலினி 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் என்ற இளைஞரை காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் ஷாலினியின் பெற்றோருக்கு தெரியவந்தது. மஞ்சுநாத் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஷாலினியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஷாலினியின் குடும்பம் வொக்கலிங்க சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் மஞ்சுநாத் குடும்பம் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஷாலினியின் பெற்றோர் மஞ்சுநாத் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் ஷாலினி கூறும்போது தான் மஞ்சுநாத்தை காதலிப்பதாகவும் தன்னுடைய வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக போலிஸார் ஷாலினியை அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் ஷாலினியின் குடும்பத்தினர் கேட்டதற்கிணங்க ஷாலினி அழைத்துவந்து அவரது வீட்டில் விட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் இது பற்றி பேசிய பெற்றோரிடம் ஷாலினி மஞ்சுநாத்தை மட்டுமே நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாலினியின் தந்தை சுரேஷ் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பிறகு சுரேஷ்ம் அவரது மனைவியும் ஷாலினியின் உடலை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று அருகிலுள்ள மேலஹள்ளி கிராமத்தில் புதைத்துள்ளனர். இதையடுத்து அங்குள்ள காவல் நிலையம் சென்று தங்கள் மகளை கொன்று விட்டதாக கூறி போலீஸாரிடம் சரணடைந்தனர். காதல் விவகாரத்தில் பெற்ற மகளையே தந்தை கொன்று புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.