திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாயில் பெட்ரோலை ஊற்றி நெருப்பை வைத்து சாகசம் நிகழ்த்திய இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்... வைரலாகும் வீடியோ...
இன்றைய தலைமுறை இளைஞர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் பல சாகசங்களை நிகழ்த்தி அதனை வீடியோவாக இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இங்கு ஒரு இளைஞர் நிகழ்த்திய சாகச வீடியோ சோகத்தில் முடிந்துள்ளது.
இளைஞர் ஒருவர் பார்வையாளர்களுக்கு மத்தியில் டேபிள் மீது நின்று கொண்டு, வாயில் பெட்ரோலை ஊற்றி நெருப்பை வைத்து சாகசம் காட்டினார். நெருப்பை கையில் வைத்துக் கொண்டு வாயில் பெட்ரோலை ஊற்றி கொப்பளித்ததும் எதிர்பாராத விதமாக தீ அவரது தாடியில் பற்றி எரிந்துள்ளது.
உடனே அங்கிருந்த நபர்கள் அந்த இளைஞருக்கு உதவி செய்து தீயை அணைத்துள்ளனர். குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை பார்த்து பாரும் இளைஞர்கள் இது போன்ற சாகசங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அதனையும் தாண்டி சாகசம் செய்ய விரும்பும் இளைஞர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் சாகசங்களை நிகழ்ந்த வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.