#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சொத்து பிரச்சனைக்காக; பெண்ணை கொடூரமாக தாக்கிய உறவினர்கள்..!
நிலத் தகராறில் பெண் மீது பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் தாலிகோட் தாலுகா ஜல்புரா கிராமத்தில் வசித்து வருபவர் மாதேவி பிரதரா. இவருக்கும் இவரது சொந்தக்காரர்களான ஆனந்த் பிரதரா, ஸ்ரீசைலா பிரதரா, நானகவுடா பிரதரா ஆகியோர் இடையே ஒரு ஏக்கர் நிலம் சம்மந்தமாக சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்றும் அவர்களுக்குள் தகராறு நடந்தது. அப்போது ஆனந்த், ஸ்ரீசைலா, நானகவுடா ஆகியோர் சேர்ந்து மகாதேவியை அடித்து உதைத்துள்ளனர். மேலும் அவரை தெருவில் தரதரவென இழுத்து வந்து காலால் எட்டி உதைத்து மிக கொடூரமாக தாக்கினர். இதனால் மகாதேவி வலிதாங்க முடியாமல் அலறி துடித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கலகேரி காவல்துறையினர் காயமடைந்த மகாதேவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மூன்று பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் மகாதேவியை மூன்று பேரும் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் இனையத்தில் வைரலாகி வருகிறது.