மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேர்வில் காண்பிக்காத மாணவனுக்கு சக நண்பர்களால் ஏற்பட்ட கொடூரம்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தொழிற்கல்வி நிறுவனம் ஒன்றில் ஆரிப் மற்றும் கைப் ஆகிய இரு நண்பர்கள் படித்து வந்துள்ளனர். சமீபத்தில் கல்லூரியில் தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வில் ஆரிபிடம் விடைத்தாளை காட்டும்படி கைப் கேட்டுள்ளார். ஆனால் ஆரிப் தனது விடைத்தாளை காண்பிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கைப் மற்றும் சக மாணவர்கள் தேர்வு முடிந்து வெளியே வந்ததும், ஆரிப்பை பிடித்தாலே காட்ட மாட்டாயா என கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக சக நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது மூலையில் ரத்த கட்டி இருப்பது தெரிய வந்தது.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆரிப் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.