யாருகிட்ட.. அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி.! இளம்பெண் செய்த அந்த காரியத்தால் கதறி துடித்த வாலிபர்!!



girl-bites-off-youngman-lips-who-try-for-rape-attempt

உத்திரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் தன்னை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபரின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மீரட்டில் உள்ள பரவலா என்ற பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் வயல் வேலைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவரை அருகே லாவட் பகுதியில் வசித்து வரும் மொஹித் சைனி என்ற இளைஞர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இந்நிலையில் அப்பெண் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்றபோது அந்த இளைஞர் அவரை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.

எவ்வளவோ முயன்றும் அந்தப் பெண்ணால் இளைஞரின் பிடியிலிருந்து தப்பிக்க முடியவில்லை. இந்த நிலையில் சுதாகரித்துக் கொண்ட அப்பெண் எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என எண்ணி, அவருக்கு முத்தம் கொடுப்பது போல சென்று அந்த இளைஞரின் உதட்டை கடித்து துப்பியுள்ளார்.

sex abuse

இதனை சற்றும் எதிர்பாராத அந்த இளைஞர் ரத்தம் சொட்ட சொட்ட வலியால் அலறி கத்தியுள்ளார். இந்நிலையில் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.