மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான 8 மாதத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! மகளை பார்க்க வந்த தந்தை கண்ட அதிர்ச்சி காட்சி!
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் வசித்து வந்தவர் விஷ்ணு. இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நிஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நிஷாவின் தந்தை லட்சுமிநாராயணன் மகளை காண அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு நிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட அவர் அதிர்ச்சியில் கதறியுள்ளார்.
பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் நிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் நிஷாவின் தந்தை, தன் மகளை வரதட்சணை கேட்டு அவரது கணவர் மற்றும் மாமனார் தயாளன் கொடுமைப்படுத்தியதாகவும் அதனால்தான் எனது மகள் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் எனவும் வேதனையுடன் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நிஷாவின் கணவர் விஷ்ணு மற்றும் மாமனார் தயாளன் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.