காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ஆக்சிஜன் சிலிண்டரோடு 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவி..! மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்.!
மூச்சு விடுவதில் சிரமம் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவி ஒரு ஆக்சிஜன் சிலிண்டருடன் தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷபியா யாதவ் என்ற அந்த மாணவி கடந்த 5 ஆண்டுகளாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
செயற்கை முறையின் மூலம் ஆக்சிஜன் டியூப் பொருத்தி சுவாசித்து வரும் இவர் படிப்பில் சிறந்த மாணவியாக திகழ்ந்துள்ளார். தற்போது மூச்சு விடும் பிரச்சனையால் பள்ளியில் இருந்து விலகி வீட்டில் இருந்தே படித்துவந்துள்ளார் மாணவி ஷபியா. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டருடன் தேர்வு மையத்துக்கு சென்று தேர்வு எழுத அனுமதி கேட்டு இருந்தார் ஷபியா.
இதற்கு அனுமதி வழங்கி, மாணவி தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது உத்தரபிரதேச கல்வித்துறை. இதுகுறித்து மாணவியின் தந்தை கூறுகையில், எனது மகள் நிச்சயம் தேர்ச்சி பெறுவார் என்றும், விரைவில் அவர் பூரண குணமடைந்து தானாகவே சுவாசித்து, மேற்படிப்புகள் படித்து நல்ல நிலைக்கு வருவார் என கூறியுள்ளார்.
மூச்சு விட சிரமம் இருந்தும் தேர்வு எழுத தயாராகும் மாணவி, அவருக்கு அனுமதி வழங்கிய அரசு, தந்தையின் தன்னம்பிக்கை பேச்சு என இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.