மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாடகக் காதல்... கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி.!! 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது.!!
உத்திர பிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் காதல் என்ற பெயரில் சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பெண் உட்பட 4 பேரை கைது செய்துள்ள காவல் துறை அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
காதல் நாடகம்
உத்திரப் பிரதேசத்தின் அலிகார் பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை காதலிப்பது போல் நடித்து வந்திருக்கிறார். மேலும் சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றி உல்லாசமாகவும் இருந்துள்ளார்.
நண்பர்களுடன் சேர்த்து கூட்டு பாலியல் வன்புணர்வு
இந்நிலையில் தீபக், அஞ்சனா சௌத்ரி என்ற பெண்ணின் துணையுடன் சிறுமியை தனது அறையில் 10 நாட்களாக அடைத்து வைத்து தனது நண்பர்களான ஆகாஷ், ஜத்தின் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும் சிறுமியை விடுவிக்க பணம் கேட்கும் மிரட்டி உள்ளார்.
இதையும் படிங்க: பகீர் சம்பவம்... கள்ளக்காதலை தட்டி கேட்ட கணவன்.!! கத்திரிக்கோலால் சம்பவம் செய்த காதல் ஜோடி.!!
கைது செய்த காவல்துறை
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்த காவல்துறை சிறுமியை அடைத்து வைத்த அறைக்கு சென்று அவரை மீட்டது. மேலும் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட தீபக், அவரது நண்பர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய அஞ்சனா சௌத்ரி ஆகியோரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது வன்கொடுமை, பாலியல் வன்புணர்வு போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: ஷாக்கிங் வீடியோ... "கட்டிப்புடி கட்டிப்புடிடா.." முதல்வர் அறையில் பெண் ஆசிரியையுடன் நெருக்கம்.!!