விமான கதவருகே நின்று ரகளை செய்த தொழிலதிபர்.. கதறவிட்ட பயணிகள்..!
கோவா விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் விமானம் நேற்று புறப்பட்டது. விமான பயணிகள் அனைவரும் விமானத்திற்குள் சென்றதும், தங்களின் இருக்கைகளில் அமர்ந்து சீட் பெல்ட்டை போட்டுக்கொண்டனர்.
அப்போது, அதே விமானத்தில் பயணம் செய்த டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சல்மான் கான் (வயது 26), தனது இருக்கைக்கு செல்ல மறுத்து தகராறு செய்தார்.
விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு சமிக்கை கிடைத்ததும் விமானம் ஊடுபாதைக்கு சென்று பறக்க தொடங்கிய நிலையில், சல்மான் கான் நான் விமணியுடன் பேச வேண்டும் என்று கூறி, நடுவானில் பயந்துகொண்டு இருந்த விமானத்தின் கதவருகே சென்று நின்று ரகளையில் ஈடுபட்டார்.
விமான பணிப்பெண்கள் அவரை சமாதானம் செய்ய முயற்சித்த வேலையிலும் அது பயனற்றுப்போக, மும்பை விமான நிலையம் வந்ததால் விமானம் தரையிறங்க தயாராகுவதாக விமானி அறிவித்துள்ளார்.
இந்த சம்பவங்களை வேடிக்கை பார்த்து பொறுமையை இழந்த பயணிகள், தொழிலதிபரை குண்டுக்கட்டாக தூக்கி வந்து இருக்கையில் அமரவைத்து சீட் பெல்ட் அணிவித்து பிடித்துக்கொண்டனர். இதன்பின்னர், விமானமும் தரையிறங்கிய நிலையில், விமானி தெரிவித்த புகாரின் பேரில் காவல் துறையினர் தொழிலதிபரை கைது செய்தனர்.