மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென மயங்கி விழுந்து மணமேடையிலேயே உயிரிழந்த மாப்பிள்ளை.! இதுதான் காரணமா.! சோக சம்பவம்!!
அதிக டிஜே சத்தத்தால் திருமணத்தன்று மணமேடையிலேயே மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஸ்ரீராம்மகரி மாவட்டத்தில் இந்தவார் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சுரேந்திர குமார். அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு ஆட்டம், பாட்டம் என திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அப்பொழுது கொண்டாட்டத்தில் டிஜே இசை அதிக சத்தத்துடன் ஒலிக்கப்பட்டுள்ளது.
இதனால் டிஸ்டர்ப் ஆன மணமகன் பலமுறை டிஜே சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் கொண்டாட்டத்தில் அவர் சொல்வதை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை. இந்த நிலையில் மணமகனும், மணமகளும் மாலை மாற்றிக் கொண்டுள்ளனர். அப்பொழுது மணமகன் திடீரென மயங்கி சரிந்து விழுந்துள்ளார்.
இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுரேந்திர குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். டிஜே அதிக சத்தத்தால் திருமணத்தன்று மாப்பிள்ளை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.