மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டாய்லெட்டில் இருந்து வெளியே வந்த யுவராஜ் செய்த காரியம்.! கிண்டல் செய்த ஹர்பஜன்.! ஜாலியான ஹோலி செலிபிரேஷன்.!!
இந்தியாவில் நேற்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் வண்ணங்களை பூசி தங்களது மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில் திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் தாங்கள் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்தனர்.
இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் மற்றும் ஹர்பஜன்சிங் இருவரும் தாங்களும் ஜாலியாக ஹோலி கொண்டாடிய வீடியோவை சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், யுவராஜ் கழிவறைக்குச் சென்று வெளியே வந்தவுடன், கலர் பொடிகளை எடுத்து ஹர்பஜன் முகத்தில் பூசி ஹோலி வாழ்த்து கூறுகிறார்.
அதுபோலவே ஹர்பஜனும் வண்ணங்களை எடுத்து யுவராஜ் முகத்தில் பூசி வாழ்த்து கூறியுள்ளார். பின்னர் நீ இப்போது டாய்லெட்டில் இருந்துதானே வந்தாய் என ஹர்பஜன் கேட்க, யுவராஜ் சிரித்தவாறே மன்னித்து விடு என கூறுகிறார். அவ்வாறு கிண்டலாக பேசிக்கொண்ட வீடியோவை பகிர்ந்து அவர்கள், எங்களைப் போல ஹோலி கொண்டாட வேண்டாம். சுகாதாரமாக வண்ணங்களை பூசி ஜாலியாக மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடுங்கள் என கூறியுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.