மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 வயது சிறுவன் 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. கடிதத்தில் பரபரப்பு தகவல்.!
சக மாணவர்களின் மனரீதியான தொல்லையால், 10 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட துயரம் நடந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள பரீதாபாத் நகரில் வசித்து வரும் பள்ளி ஆசிரியைக்கு 15 வயதுடைய மகன் இருக்கிறார். ஆசிரியை பணியாற்றி வரும் பள்ளியிலேயே, அவரின் மகனும் 10 ஆம் வகுப்பில் பயின்று வருகிறார்.
இந்நிலையில், பள்ளியில் பயின்று வரும் மாணவர்களால், ஆசிரியையின் மகன் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரியவருகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த மகனை, ஆசிரியை தேற்றி வந்துள்ளார்.
ஆனாலும், சிறுவன் மனதளவில் பாதிக்கப்பட்ட வடு ஆறாமல் அதிகரிக்க, கடந்த பிப். 24 ஆம் தேதி கட்டிடத்தின் 10 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டான்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுவனின் தாயான ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், பள்ளியின் முதல்வரின் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் தற்கொலைக்கு முன்னதாக தனக்கு நடந்த துயரம் குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிறுவனின் தற்கொலை கடிதம் மற்றும் புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.