திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
58 வயசுல இது தேவையா?.. மாடல் அழகியின் சல்லாப வலையில் விழுந்து கொலையாளியான ஹோட்டல் உரிமையாளர்: சுட்டுத்தள்ளிய பயங்கரம்.!
சல்லாப எண்ணம் கொண்டு பெண்ணின் வலையில் விழுந்த 58 வயது நபர், கொலையாளியாக கைது செய்யப்பட்டது குறித்த தகவலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதியில், முன்னாள் பஞ்சாப் மாடல் அழகியும், ரௌடியின் காதலிமான திவ்யா பஹுஜா (2) கொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் தங்கும் விடுதியின் உரிமையாளர் அபிஜித் சிங் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்த ஹேமராஜ் (28), ஓம் பிரகாஷ் (23) ஆகியோரும் விசாரணைக்கு பின் கைதாகினர்.
கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை செய்கையில், திவ்யா அபிஜித் சிங்குடன் பழக்கத்தை ஏற்படுத்தி, தனிமையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயற்சித்து இருக்கிறார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் அபிஜித் சிங் திவ்யாவை கொலை செய்தது தெரியவந்தது.
அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் மாடல் அழகியை அபிஜித் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து, பின் உடலை மூவருமாக இழுத்துச்செல்லும் காட்சிகளும் பதிவாகி இருக்கின்றன.