#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பணம் கொடுக்காததால் அந்தரங்க உறுப்பை வெட்டி கடத்தி சென்ற கொள்ளைக்கும்பல்; நள்ளிரவில் இளைஞருக்கு துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
ஹரியானா மாநிலத்தில் உள்ள நஹ் மாவட்டத்தில் வசித்து வருபவர் தர்மேந்திரா (வயது 32). இவரின் சொந்த ஊர் பீகார் மாநிலம் ஆகும். ஹரியானாவில் நஹ் மாவட்டம், காண்ட்சா கிராமத்தில் தங்கியிருந்து அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று தர்மேந்திரா இரவு 11 மணியளவில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அவரை இடைமறித்த 3 பேர் கொண்ட முகமூடி கும்பல் கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டியுள்ளது.
அவரிடம் பணம் இல்லை என்பதால், தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த கொள்ளைக்கும்பல், அவரின் ஆடைகளில் சோதனை போட்டும் பலனில்லை. நிலைமை அங்கு மாற தொடங்கியதால், சுதாரித்த தர்மேந்திரா அங்கிருந்து பயத்தில் ஓட்டம் எடுத்துள்ளார்.
ஆனால், அவரை பின்தொடர்ந்த 2 பேர் மடக்கிப்பிடித்து, எங்களுக்கு கொடுக்க உன்னிடம் பணம் இல்லை, ஆகையால் உனது அந்தரங்க உறுப்பை வெட்டி எடுத்து செல்கிறோம். பணத்தை கொடுத்துவிட்டு அதனை வாங்கிச்செல் என அந்தரங்க உறுப்பை வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.
நிலைகுலைந்துபோன தர்மேந்திரா இரத்த வெள்ளத்தில் கதறியபடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவி கேமிரா ஆதாரத்துடன் கொள்ளையர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது.