தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கடும் அபாயம்..! மக்கள் வெளியே வரவேண்டாம், முதல்வர் வேண்டுகோள்..!!
கடந்த சில வாரங்களாகவே இமாச்சலப் பிரதேசத்தில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளைக்காடாக மாறி உள்ளது. இந்த பருவமழை காரணத்தால் இமாச்சலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மழையினால் பாலங்கள் முழுவதும் அடித்து செல்லப்பட்டுள்ளது.
ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மழையில் இழுத்து செல்லப்பட்டன. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை அச்சுறுத்தி வருவதால் மாநிலமே வெள்ளத்தால் தத்தளித்து கொண்டிருக்கிறது.
இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அம்மாநில முதல்வர்சுக்விந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மேலும் தொடர்ந்து 24 மணி நேரம் கன மழை பெய்ய உள்ளதால் நம் மாநில மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவித்துள்ளார்.
மேலும் அவசர உதவி எண்களை அறிவித்து யாரேனும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கியிருந்தால் உடனே 1100, 1070, 1077 இந்த எண்களை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில், எந்த நேரமும் உதவி செய்ய தயாராக இருப்பேன் என்று அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட எம்எல்ஏக்களும் அந்த பகுதியில் முகாம் அமைத்து மக்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.