மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. ஆதரவற்ற குழந்தைகளுக்கு 5 ரூபாய் என உங்களுக்கும் போன் வருதா?.. லிங்கை தொட்டீங்கள்., கெட்டீங்கள்..! உஷார்..!!
சைபர்கிரைம் மோசடிகள் பல்வேறு வகைகள் நடைபெற்று வருகின்றன தற்போது Gpay மூலமாக அவர்கள் நமக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் பணம் அனுப்பி நமது வங்கிகணக்கின் விபரங்களை அறிந்துகொண்டு, நமது பணத்தை நமக்கே தெரியாமல் திருடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியை சார்ந்த தபசும் என்ற பெண்மணி மருத்துவரை சந்திக்க கிளினிக் எண்ணுக்கு அழைப்பு விடுத்த நிலையில் அந்த அழைப்பு செல்லவில்லை.
பின்னர் ஒருவர் தொடர்புகொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 அனுப்புமாறு அதுக்கு லிங்க் அனுப்புகிறேன் என கூறியுள்ளார். இதனை பெண்மணியும் உண்மை என நம்பி அந்த லிங்கை கிளிக் செய்து பணம் அனுப்ப முயற்சித்தும் பணம் செல்லவில்லை.
ஆனால் சிறிது நேரம் கழித்து அவரின் வங்கிகணக்கில் ரூ.60,000 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. பின் இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த பெண்மணி சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகாரளிக்கவே தற்போது விசாரணை நடந்து வருகிறது.