மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாநகர பேருந்து பணிமனையில் பயங்கர தீ விபத்து.. மின்கசிவால் தீக்கு இரையான பேருந்து.!
மின்சார கசிவு காரணமாக மாநகர பேருந்து பணிமனையில் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லா பகுதியில் மாநகரப் பேருந்து பணிமனையில் தீப்பற்றியுள்ளது. இதில் அங்கிருந்த ஒரு பேருந்து முற்றிலுமாக தீயில் எரிந்து கருகியது.
இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய நிலையில், முதற்கட்ட விசாரணையில் மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும், தீயை உடனடியாக அனைத்து விட்ட காரணத்தால் பெரும் சேதம் மற்றும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தப்பித்துள்ளது என்று சிம்லா துணை மேயர் சவுகான் தெரிவித்திருக்கிறார்.