திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்து மாணவியுடன் பேசிய முஸ்லிம் மாணவர் மீது கொடூர தாக்குதல்!
கர்நாடகா மாநிலம் யாத்கிர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதான வாஹித் என்ற முஸ்லிம் மாணவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். என்ன கல்லூரியில் அதே பகுதியை சேர்ந்த ஹிந்து மாணவி ஒருவரும் படித்து வந்த நிலையில், இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி அந்த முஸ்லிம் மாணவரை 9 பேர் கொண்ட மர்மகும்பல் கடத்தியுள்ளது. அதன் பின்னர் சுமார் 5 மணி நேரமாக தனி அறையில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சக இந்து மாணவி ஒருவரும் நட்பாக பழகி வந்ததாகவும், இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு பேசி வந்தது அந்த மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. எனவே பாரதியின் பெற்றோர் தன்னை கடத்தி தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியை சேர்ந்த 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மூன்று பேர் அந்த பெண்ணின் வீட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.