EMI வாங்கி ஹனிமூன் செல்லும் புதுமண தம்பதிகளே.. உஷாராக இருங்கள்., பேராபத்தில் சிக்க வேண்டாம்.!



Honey Moon Couple Donot Get EMI Trip

தேனிலவு என்பது திருமணத்திற்கு பின்னர் ஒவ்வொரு தம்பதியும் விரும்புவது. அதனை சுதாரிப்புடன் சந்திப்பதே தம்பதியின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது.

திரைத்துறையை சேர்ந்த திருமணம் முடிந்த தம்பதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு தேனிலவுக்கு செல்வது வழக்கமாகி உள்ளது. இவர்களை பார்த்து நடுத்தர குடும்பத்தினர் பலரும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல விரும்புகின்றனர். 

அதற்காக குறைந்தபட்சமாக இலட்சகணக்கில் செலவாகிறது. திரைத்துறை நட்சத்திரங்கள் தங்களின் சம்பாத்தியம், பிற முதலீடுகள், விளம்பரத்திற்கான சம்பாத்தியம் என்று பலவகையில் சொத்துக்களை சேர்ப்பதால் அவர்கள் அங்கு இயல்பாக சென்று வருகின்றனர். 

ஆனால், நடுத்தர குடும்பமோ தங்களின் வாழ்நாள் ஆசையாக அதனை நினைத்து செயல்படுகிறது. சிலர், தங்களின் சம்பாத்தியத்தை சேர்த்து 40 வயதிலும் ஐரோப்பிய நாட்டிற்கு இன்பமாக சுற்றுலா சென்று வருகிறார்கள். 

Honey moon

இதில், தற்போதுள்ள தம்பதிகள் ஆபத்தான தேர்வாக ஐரோப்பிய நாடுகளுக்கு தேனிலவு சுற்றுலா செல்ல EMI வழங்கும் நிறுவனங்களை தேடி செல்கின்றனர். இதற்கான வட்டி தொகை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக களத்தகவல் கிடைக்கப்பெறுகிறது. 

இதனை அறியாத பல புதுமண தம்பதிகளும் இன்பமாக சுற்றுலாவுக்கு சென்று வந்து கடனை அடைக்கவும், வட்டி கட்ட இயலாமல் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. சிலர், தவறான முடிவுகளை எடுப்பதாகவும் தெரியவருகிறது. ஆகையால், திருமணம் செய்த புதுமண தம்பதிகள் கவனமாக இருப்பது சாலச்சிறந்தது.