மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆந்திர மாநிலம்: குண்டூரில் டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து... 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி.!
சற்றுமுன் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கொண்டேபாடு என்ற கிராமத்தில் ஏற்பட்ட டாக்டர் விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கொண்டேபாடு கிராமத்தைச் சார்ந்த ஒருவரின் டிராக்டரில் 22 பேர் ஏறிச் சென்றுள்ளனர். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்துள்ளது. இந்தக் கோர விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த ஆறு பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோர விபத்தால் ஆந்திர மாநிலம் முழுவதும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது.