தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
10 ரூபாய்க்கு ஆசைப்பட்ட உணவகத்திற்கு 2 லட்சம் பறிபோன சம்பவம்..! கூடுதல் விலை வைத்து ஐஸ்க்ரீம் விற்றதால் கிடைத்த தண்டனை.!
மத்திய மும்பையில் இயங்கி வரும் இந்த உணவகம் ஒன்று ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்க்ரீம் ஒன்றுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தநிலையில் அந்த உணவகத்திற்கு நீதிமன்றம் தற்பொழுது 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஜாதவ் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி பணி முடிந்து தனது வீட்டிற்கு சென்றபோது குறிப்பிட்ட உணவகத்தில் ஐஸ்க்ரீம் ஒன்றை வாங்கியுள்ளார். ரூ.165 விலையுள்ள ஐஸ்க்ரீம் ரூ.175 ரூபாய் என அவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் விலைக்கு விற்பது குறித்து அதிர்ச்சியடைந்த காவலர் பாஸ்கர் இதுகுறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த நிலையில் நீதிமன்றம் தற்போது 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நுகர்வோருக்கும் இழப்பீடு வழங்கவும் நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பில், மத்திய மும்பையில் இயங்கி வரும் இந்த உணவகம் கடந்த 24 ஆண்டுகளாக நாகு இயங்கிவரும் நிலையில் நாளொன்றுக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வந்துள்ளது. குறிப்பிட்ட உணவகம் இது போன்ற சில்லறை விற்பனையில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலை வைத்து விற்பனை செய்ததன் மூலம் ஏராளமான லாபம் ஈட்டி இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவகம் கூறிய பதிலில், "ஐஸ்க்ரீமை பாதுகாத்து வைப்பதற்கு செலவு ஏற்படுவதாகவும், ஐஸ்க்ரீம் கடைக்கும், உணவகத்திற்கும் வித்தியாசம் உள்ளது" எனவும் வாதிட்டனர். ஆனால் நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேநேரம், தான் உணவகத்துக்குள் நுழைய கூட இல்லை, வாயிலில் இருக்கும் பணம் செலுத்தும் இடத்திலேயே பணத்தை செலுத்தி ஐஸ்க்ரீமை வாங்கியதாவும், கடையில் உள்ள தண்ணீரையோ, மின்விசிறி, ஏசி உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்த இல்லை.
எனவே நான் ஏன் அதிக பணம் செலுத்தவேண்டும் என நுகர்வோர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இறுதியில் உணவகத்திற்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நுகர்வோருக்கும் இழப்பீடு வழங்கவும் நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.