அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்: ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது எப்படி?



how link aadhaar with driving licence

ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமம் இணைக்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய சட்டம் மற்றும் தகவல்தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் மத்திய சட்ட மற்றும் தகவல்தொழில்நுட்பவியல் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டார். 

aathaar

அதில் அவர் பேசுகையில், ஆதார் எண் திட்டம் கொண்டு வரப்பட்டதால் மக்களுக்கு பல பயன்கள் ஏற்பட்டுள்ளன. விரைவில் ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுனர் உரிமத்தை இணைப்பதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது என கூறினார்.

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் கார்டு எண்ணை இணைப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்:

 உங்கள் மாநிலத்தின் சாலை போக்குவரத்து துறையின் இணையதளத்திற்கு சென்று  “Link Aadhaar” என்ற LINK ஐ கிளிக் செய்து, அடுத்து வரும் டிராப் டவுன் மெனுவை கிளிக் செய்து “Driving License” என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

அதில் ஓட்டுநர் உரிமத்தின் எண்ணை உள்ளிட்டு"Get Details” என்பதைக் கிளிக் செய்தவுடன், உங்கள் ஒட்டுநர் உரிமத்தின் விவரங்கள் அனைத்தும் காண்பிக்கப்படும்.

இதனையடுத்து ஆதார் எண்ணை உள்ளிட கோரப்பட்டுள்ள தெரிவைத் தேர்வு செய்து அதில் விவரங்களை அளிக்க வேண்டும்.

உங்களின் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் கட்டாயம் தேவை. ஆதார் எண் உள்ளிட்ட பிறகு மொபைல் எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச் சொல்லை உள்ளிட்டு “Submit” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

இதனையடுத்து  ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பை உறுதி செய்யக்கூடிய எஸ்எம்எஸ் வந்துவிடும்.