மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டீ போட பத்து நிமிடம் தாமதம்: மனைவியின் தலையை துண்டித்து கொன்ற கணவன்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் தர்மவீர். இவர் தினக்கூலியாக பணியாற்றி வந்துள்ளார். இவரின் மனைவி சுந்தரி. தம்பதிகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கின்றனர்.
தர்மவீர் எப்போதும் வீட்டில் சண்டை செய்வது வாடிக்கை என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று தனது மனைவியிடம் அவர் குடிக்க டீ கேட்டுள்ளார். அப்போது மனைவி பத்து நிமிடம் காத்திருக்குமாறு கூறவே, ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த வாளை எடுத்து மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார்.
மேலும் டீ போட்டு தர பத்து நிமிடம் தாமதமானதால் கொலை செய்ததாக தர்மவீர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தர்மவீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.