மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாப்பாடு தாமதமானதால் மனைவியை கொன்ற கணவன்.. அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்!
உத்தரதேச மாநிலத்தில் மதிய உணவு தாமதமாக சமைத்ததால் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு, அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாப்பூரை சேர்ந்தவர் பரசுராம். இவரது மனைவி பிரேமா தேவி. இந்த நிலையில் நேற்று மதியம் வயலில் தனது வேலைகளை முடித்துவிட்டு வந்த பரசுராம், மனைவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார்.
ஆனால், வீட்டில் அப்போது சாப்பாடு தயாராக இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பரசுராம் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பரசுராம் கூரான ஆயுதத்தால் மனைவியை பலமாக தாக்கியுள்ளார்.
இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயமடைந்த பிரேமா தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சிறைக்கு செல்ல வேண்டும் என்ற அச்சத்தில் பரசுராம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். எந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அருகில் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.