மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக இப்படியா.! பக்கவாக ப்ளான் போட்டு கணவர் செய்த காரியம்.! அம்பலமான நாடகம்!!
ராஜஸ்தான் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வந்தவர் 32 வயது நிறைந்த ஷாலு தேவி. இவர் அண்மையில் தனது அண்ணனுடன் கோயிலுக்கு பைக்கில் சென்றபோது அவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த கார் அவர்களின் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்து ஷாலு தேவி அவரது அண்ணன் இருவரும் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தனர்.
இந்நிலையில் இது விபத்து என போலீசார் வழக்கை முடித்த நிலையில், ஷாலுவின் கணவர் மகேஷ் சந்த்தின் நடத்தை போலீசாருக்க்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் மகேஷ் சந்த்திடம் தீவிர விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஷாலு வரதட்சணை புகார் கொடுத்தநிலையில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த அவர் தனது மனைவியை கொலை செய்ய நினைத்துள்ளார்.
ஆனால் அவரை கொலை செய்வதில் தனக்கு எந்த லாபமும் இல்லை என எண்ணிய அவர் மனைவி பெயரில் ரூ.2 கோடிக்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளார். அதனை தொடர்ந்து மனைவியுடன் பாசமாக இருப்பதாக நடித்துள்ளார். இந்த நிலையில் இன்சூரன்ஸ் போட்டு ஒரு வருடமான நிலையில் ஷாலுவை கோவிலுக்கு செல்லகூறி கூலிப்படையை ஏவி காரால் இடித்து மனைவியை கொலை செய்ததாக மகேஷ் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் மகேஷ் சந்த் மற்றும் கூலிப்படையினரை கைது செய்துள்ளனர்.