மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி கொலையில் மர்மம்!. உள்ளாடைக்குள் இருந்த அமெரிக்க டாலர்கள்!.
பெங்களூரில் அவினாஷ் அகர்வால் என்ற மருத்துவர் தனது மனைவி சோனா அகர்வாலுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோனா தனது அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
சோனாவின் உடலை பரிசோதனை செய்தபோது அவரது உள்ளாடையில் அமெரிக்க டாலர்கள் மற்றும் தங்க நகைகள் இருந்தன. சம்பவம் நடந்த அன்று பக்கத்தில் வீட்டில் இருந்து சோனா வந்ததாக அந்த வீட்டில் வசிக்கும் பிரசாத் என்பவரின் மாமனார் கூறியுள்ளார்.
அங்கிருந்து வெளியில் வந்தபோது தான் சோனா கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பக்கத்து வீட்டு நபரான பிரசாத் கூறுகையில், என் மனைவியும், சோனாவும் தோழிகள். சில நாட்களுக்கு முன்னர் எங்கள் வீட்டின் சாவி தொலைந்துவிட்டது.
ஞாயிறு அன்று வீட்டு மொட்டையில் சிறிய விழா கொண்டாடினோம் அப்போது எனது மாமனார் கீழே வந்துள்ளார். அப்போது சோனாவை அவர் பார்த்த நிலையில் அவர் மாடியிலிருந்து கீழே குதித்துவிட்டதாக பிரசாத்தின் மாமனார் கூறினார்.
அனால் அவினாஷ் கூறுகையில் தனது மனைவி சோனா மரணத்தில் மர்மம் இருக்கின்றது, அவர் வேணுமென்றே செய்திருக்க மாட்டார் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.