மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த விஷயத்திற்காக தினமும் அடி உதை.... விரக்தியில் மனைவி எடுத்த பகீர் முடிவு.!
கேரள மாநிலத்தில் கணவரின் கொடுமை தாங்காமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக மாமனார் கொடுத்த புகாரின் பேரில் கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அடுத்துள்ள ஆரூர் பகுதியைச் சேர்ந்தவர் உன்னி இவருக்கு வயது 40. இவர் நீது (33). என்ற பெண்ணை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திருமணமான நாளிலிருந்து தனது மனைவி அழகாக இல்லை என்று கூறி உரைய அடிக்கடி சித்திரவதை செய்து கொண்டிருக்கிறார் உன்னி.
இதனால் மனைவி கோபமடைந்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும் பின்னர் அவரது கணவர் சென்று சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருவதும் என 10 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும் உன்னி தனது மனைவிக்கு உணவு கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தி இருக்கிறார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் குழந்தைகளுக்கு இன்னும் பாட புத்தகங்கள் கூட வாங்கி கொடுக்காமல் இருந்திருக்கிறார்.
இதனால் விரக்தியிலிருந்த மனைவி நீது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நீதுவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அவரது கணவர் உன்னியை கைது செய்துள்ளனர்.