உடல் எடையை கூட்ட புரோட்டின் பவுடர் சாப்பிடுறீங்களா? - ஐசிஎம்ஆர் பகீர் எச்சரிக்கை..! 



ICMR Advice about Who take Protein Powder to Engage Weight Gain 

அதிக பரிந்துரைக்கப்படும் புரோட்டின் பவுடர்கள்:

இன்றளவில் கடைகளில் உடல் எடையை கூட்ட, குறைக்க, மெருகூட்ட என பல விதமான சத்து பவுடர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை தனியார் நிறுவனங்களால் தயாரித்து உலகளவில் சந்தைப்படுத்தப்படுகிறது. உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைக்க, அதிகரிக்க புரோட்டின் பவுடர்கள் பெரும்பாலும் பரிந்துரை செய்யப்படுகின்றன. 

இதையும் படிங்க: கோடையில் அடிக்கடி கீரைகளை சாப்ப்பிடுவதால் என்னாகும் தெரியுமா.?!

ஐசிஎம்ஆர் எச்சரிக்கை:

ஆனால், இவ்வாறான புரோட்டீன் பவுடர்களால் மிகப்பெரிய பக்கவிளைவாக சிறுநீரக பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. இவ்வாறான புரோட்டீன் பவுடர்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதிக உப்பு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மீதான விருப்பத்தையும் மக்கள் குறைக்க வேண்டும். 

கவனத்துடன் செய்யப்பட அறிவுறுத்தல்:

இவ்வாறான உணவுகளின் தயாரிப்பு லேபிளில் இருக்கும் தகவலை படித்து மக்கள் உண்மையை புரிந்து செயல்பட வேண்டும். புரதசத்து வேண்டி எடுத்துக்கொள்ளப்படும் பொடியை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், சிறுநீரகம் சார்ந்த பாதிப்புகளும் ஏற்படும் என்பதால் மக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் ஐசிஎம்ஆர் தனது அறிவுறுத்தலில் குறிப்பிட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? விபரம் இதோ.!