53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
தகாத உறவால் தகராறு.. இளைஞர் தலையில் கல்லை போட்டு, எரித்து கொலை.!
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியில் பாதி எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எந்த நிலையில் கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி முதற்கட்ட விசாரணையில் வாலிபர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும் கொலை கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து நடத்திய விசாரணையில், மாருதி நகரை சேர்ந்த விஜய பசவன் என்ற இளைஞர் என்பது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடைபெற்றதாக போலீசார் கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.